News

திருச்செந்தூர் அருகே கோயிலில் திருட்டு!
January 7, 2010, 10:33 AM
 
திருச்செந்தூர் அருகிலுள்ள உள்ள கோயிலில் நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு சுடலை மாடசுவாமி கோயில் உள்ளது. நேற்று அதிகாலை கோயில் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்ட கோயில் பூசாரி சண்முகம் திருச்செந்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பத்ரகாளியம்மன் கழுத்தில் இருந்த தங்கதாலி கொள்ளையடிக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் கோயிலின் உட்புறம் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்புடைய வெள்ளிப் பொருட்களை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் முயற்சிசெய்திருப்பதும் தெரியவந்தது.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.