News

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
January 8, 2010, 12:16 PM
 
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சேர்மனாக பி.பிரபாகரன் பதவி ஏற்றார். மேலும் வங்கி நிர்வாகிகளாக 8பேரும் பதவி எற்றனர்.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உறுப்பினர்களின் 86மற்றும் 87வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வங்கியின் நிர்வாக இயக்குனர் தலைமை நிர்வாக அதிகாரியுமான டி.நாகமால் ரெட்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். பின்னர் வங்கியின் 86வது வருடாந்திர பொதுக்குழு கூட்ட அறிக்கையின்படி காலியாக உள்ள 3 நிர்வாகி பதவிகளுக்கும் 87ம் ஆண்டு பொதுக்குழு கூட்ட அறிக்கையின்படி காலியாக உள்ள 3 நிர்வாகி பதவிகளுக்கும் சுழற்சி முறையில் ஓய்வுபெற்ற 3 நிர்வாகி பதவிக்கும் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் 10 ஆயிரத்து 624பேர் பிராசி கொடுத்துள்ளதாக 1,57,340 பேர் பங்குதாரர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் புதிய டைரக்டருக்கான தேர்தலில் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த தேர்தலில் 8 நிர்வாகிகள் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 8 நிர்வாகிகள் பெயர் வருமாறு.  டி.ராஜ்குமார், எஸ்.சி.சேகர், பி.மகேந்திரவேல். வி.வி.டி.என்.விக்ரமன், எஸ்.ஆர்.அரவிந்த்குமார், திருகுமார்வேதநாயகம், பி.பிரபாகரன், ஆகிய 8 பேர்களும் மற்றும் வாங்கரால் நியமிக்கப்பட்ட நிர்வாகி எஸ்.சுந்தர், ரிசர்வ் வங்கியின் மூலம் நியமிக்கப்பட்ட நிர்வாகி எஸ்.சுவாமிநாதன், வங்கியின் நிர்வாக அதிகாரி நாகம்மால் ரெட்டி ஆகியோர் நேற்று வங்கி டைரக்டராக பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதன்பின் நடந்த வங்கி நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய சேர்மனாக பி.பிரபாகரன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் வங்கி பொதுமேலாளர்கள் எஸ்.செல்வன் ராஜதுரை, ஏ.மாணிக்கம் உள்பட வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி நிர்வாகிகள் வங்கியிலிருந்து ஊர்வலமாக தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே உள்ள மார்க்கெட் வாசல் முன்பு உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்பு தூத்துக்குடி தெட்சணமாறநாடார் சங்க அலுவலகத்தில் வைத்து தெட்சணமாறநாடார் சங்கம் தூத்துக்குடி நாடார் மகமை சங்கம், நாடார் மகாஜன சங்கம், வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு தெட்சணமாறநாடார் சங்க துணைதலைவர் எம்.எஸ்.ஏ.பீட்டர் ஜெபராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடார் மகமை சங்க செயலாளர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு  மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் நிர்வாகி டி.ஆர்.தமிழரசு வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் நிர்வாகி சி.எஸ்.ராஜேந்திரன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். நாடார் மகாஜனம் சங்க செயலாளர் கரிக்கோல்ராஜ் புதிய நிர்வாகிகளை பாராட்டி வங்கிக்கு சேவை செய்யும் விதம் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாரியப்பன் ஏ.ஆர்.சீனிவாசன் தமிழ்ச்செல்வன் ஜெயக்கொடி மரகதராஜ பாக்கியம். எம்.ஆர்.காமராஜ், பி.கே.ஒய்.ஞானசேகரன், சதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகிகள் தெட்சணமாற நாடார் சங்க துணைத்தலைவர் எம்.எஸ்.ஏ.பீட்டர் ஜெபராஜ் சால்வை அணிந்தார். மேலும் தூத்துக்குடி டி.எஸ்.எஃப் பிளாசாவில்  நடந்த விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகிகளுக்கு தெட்சணமாற நாடார் சங்க தலைவர் எஸ.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன். துணை தலைவர் எம்.எஸ்.ஏ.பீட்டர் ஜெபராஜ் மற்றும் தமிழ்ச்செல்வன் ஜெயக்கொடி ஆகியோர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சக்திமுருகன்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.