News

திருச்செந்தூர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
January 9, 2010, 10:09 AM

திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை வரும் 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என,​​ தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது.​ வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெற்று,​​ முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தி.மு.க.​ சார்பில் அனிதா ஆர்.​ ராதாகிருஷ்ணன்,​​ அ.தி.மு.க.​ சார்பில் அம்மன் டி.​ நாராயணன்,​​ தே.மு.தி.க.​ சார்பில் கோமதி ஆ.​ கணேசன் மற்றும் 22 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 25 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் செலவு கணக்குகளை முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.​ அதன்படி வரும் 22-ம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும்.​ தேர்தல் செலவு கணக்குகளை முறையாகத் தாக்கல் செய்யத் தவறினால் எதிர்காலத்தில் போட்டியிடத் ​ தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திமுருகன்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.