News

ஓட்டப்பிடாரம்:4 கால்களுடன் அதிசய கோழிக்குஞ்சு!
January 10, 2010, 10:22 AM
 
ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளிக்கிழமை 4 கால்களுடன் கோழிக் குஞ்சு பிறந்துள்ளது.​இதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.  ​

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி கிராமம் உள்ளது.இங்கு பொன்முனியசாமி ​(45) என்பவரின் வீட்டில் நாட்டுக் கோழியை வளர்த்து வந்தார்.​ அதன் முட்டைகளைச் சேர்த்து குஞ்சு பொறிக்க வைத்தார்.​ அவற்றில் ஒரு முட்டையிலிருந்து அதிசயமாக 4 கால்களுடன் குஞ்சு பிறந்துள்ளது.

​4 கால்களுடன் மற்ற குஞ்சுகளைப் போல சாதாரணமாக நடக்கவும்,​​ ஓடவும் அது செய்கிறது.​ இதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். 

ரகு,வெள்ளாரம்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.