News

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தூத்துக்குடியில் மழை!
January 10, 2010, 11:07 AM
 
வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தூத்துக்குடியில் பரவலாக நல்ல மழை பெய்த‌து.
 
வட கிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டதாக கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது தோன்றியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
 
சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் இனி மழைக்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு மக்களும், வானிலை ஆய்வு மையத்தினரும் வந்திருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் மழை வந்துள்ளது.

கடற்கரைப் பகுதியான தூத்துக்குடியில் இன்று அதிகாலை பரவலாக நல்ல மழை பெய்த‌து.இதனால் தூத்துக்குடி ந‌க‌ரின் பிர‌தான‌ சாலைக‌ளில் ம‌ழை நீர் தேங்கியுள்ள‌து.

சக்திமுருகன்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.