News

அ.தி.மு.க.​ மாவட்ட செயலர் பதவிக்கு போட்டியிட‌ 5 பேர் விருப்ப‌ ம‌னு
January 10, 2010, 3:37 PM
 
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.​ செயலர் பதவிக்கு 5 பேர் இன்று விருப்ப மனு கொடுத்தனர்.​​

அ.தி.மு.க.​ உள்கட்சி தேர்தல் கடந்த இரு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.முதலில் கிளை நிர்வாகிகள்,​​ வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.​ தொடர்ந்து,​​ நகர,​​ ஒன்றிய,​​ பேரூர் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.​ இந்த பதவிகளுக்கு பலர் மனு செய்துள்ளனர்.

 தூத்துக்குடி மாவட்ட செயலர் பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலர் எஸ்.பி.​ சண்முகநாதன்,​​ முன்னாள் மாவட்ட செயலர் இரா.​ ஹென்றி,​​ முன்னாள் சட்டப்பேரவை ​ உறுப்பினர் வி.பி.ஆர்.​ ரமேஷ்,​​ திருச்செந்தூர் ஒன்றிய முன்னாள் செயலர் பள்ளத்தூர் முருகேசன்,​​ உடன்குடி மனோகர் ஆகியோர் மனு கொடுத்தனர்.

இதேபோன்று மாவட்ட அவைத் தலைவர்,​​ துணைச் செயலர்,​​ இணைச் செயலர்,​​பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் பலர் மனு கொடுத்துள்ளனர்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.