|
கங்கண சூரிய கிரகணம்:திருச்செந்தூர் கோயிலில் 15ம் தேதி பூஜை நேரம் மாற்றம்
January 10, 2010, 3:37 PM
கங்கண சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 15ம் தேதி பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
108 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 11.25 மணியிலிருந்து பகல் 12.51 மணி வரை கங்கண சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதனை தொடர்ந்து 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
பகல் 10.30 மணி முதல் மதியம் 1.15 மணி வரை அனைத்து சன்னதிகளில் உள்ள விக்கிரகங்களில் பட்டு சாத்தப்பட்டு உள்நடை அடைக்கப்படுகிறது. அப்போது பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தொடர்ந்து 1.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு புண்ணியாக வாஜனமும், கடலில் தீர்த்தவாரியும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
kanthan
|