News

விபத்து: 7குழந்தைகளின் தந்தை பரிதாப பலி!
January 11, 2010, 7:24 PM
தூத்துக்குடி அருகே, லாரி மோதி 7 குழந்தைகளின் தந்தை பரிதாபமாக பலியானர்.
 
தூத்துக்குடி, முத்தையாபுரம், வேலாயுத நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). கூலித் தொழிலாளியான இவர், முத்தையாபுரத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி இவர் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியது.
 
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வராஜ், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவம் நடத்த இடத்தில் முத்தையாபுரம் போலீசார் லாரி டிரைவர் முனியசாமியை கைது செய்தனர்.
 
பலியான செல்வராஜிற்கு மனைவியும், 7குழந்தைகளும் உள்ளனர். அதில் இரண்டு குழந்தைகள் வாய் பேச முடியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திமுருகன்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.