News

தூத்துக்குடியை கலக்கிய கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது!
January 11, 2010, 7:35 PM

தூத்துக்குடி மாவட்டத்தை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் 2பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு, சாமிநகரைச் சேரந்த முத்துராஜ் மகன் செல்வம் (24), பழையகாயல்,  காந்தி நகரைச் சேர்ந்த மிக்கேல்ராஜ் மகன் ஏசையா (26). இவர்கள் இருவர் மீதும் தூத்துக்குடி தெர்மல்நகர், முத்தையாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொள்ளை, கொள்ளை முயற்சி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இதனையடுத்து, இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க தூத்துக்குடி எஸ்.பி.,செந்தில்குமார், ஆட்சியருக்கு சிபாரிசு செய்தார். ஆட்சியர் பிரகாஷ் செல்வம், ஏசையா ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்திரவிட்டார்.
 
இதனையடுத்து, முத்தையாபுரம் போலீசாரால்  இருவரும் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சக்திமுருகன்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.