திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஜனவரி 15ம்தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் (ஜனவரி) 15ம்தேதி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் மது விற்பனை, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மது கடத்துதல், மதுவை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.