News

தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூரில் அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!
January 13, 2010, 9:15 AM

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் திருநாளையொட்டி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்படுகிறது.

அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. 4 மணிக்கு உதய மார்த்தாண்ட  அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்திற்கு பின் உதய  மார்த்தாண்ட தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து காலசாந்தி தீபாராதனைக்குப் பின் தீர்த்தவாரி நடைபெறுகிறது. காலை  10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம்  நடைபெறுகிறது. அன்று மாலை சாயரட்சை  தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கிரிவீதி உலா நடைபெறுகிறது.

கந்தன்,திருச்செந்தூர்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.