தூத்துக்குடியில் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற இளம்பெண் காணாமல் போனதால் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி பீட்டர் கோவில் தெருவைச் சேர்ந்த எட்வின் மகள் லூயிஸ் அல்பா இன்பாண்டினா(20). இவர், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த போது, இடையில் படிப்பை நிறுத்திவிட்டார். இதற்கிடையே கடந்த 20 நாட்களாக, தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் கம்ப்யுட்டர் சென்டரில் படித்து வருகிறார்.
கடந்த 9ம் தேதி கம்ப்யுட்டர் சென்டருக்கு சென்ற பாண்டினா வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, தூத்துக்குடி தென்பாகம் போலீசில் எட்வின் புகார்செய்தார். இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் வழக்கு பதிவு செய்து,காணாமல் போன இளம்பெண்ணை தேடிவருகிறார்.