சிங்கப்பூரில் இருந்து இறக்குமதியான ரூ.1.61 கோடி அழகு சாதன பொருட்கள் தூத்துக்குடியில் பறிமுதல்!

தூத்துக்குடி துறைமுகம் மூலம் வெளிநாடுகளில் இருந்து விதிமுறைகளுக்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கோடியே 61 லட்சம் மதிப்புள்ள அழகுசாதன பொருட்கள், இரும்பு ராடுகள் மற்றும் முறைகேடாக ஏற்றுமதி செய்ய இருந்த துணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகம் மூலம் சட்டத்துக்கு புறம்பாக சில பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜனுக்கு தகவல் கிடைத்தது. சுங்க இலாகா அதிகாரிகள் மும்பையை சேர்ந்த துஷார் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்துக்காக சிங்கப்பூரில் இருந்து வந்த கன்டெய்னரை சோதனை செய்தனர்.
அதில் இறக்குமதி விதிகளுக்கு புறம்பாகவும், அனுமதி பெறா மலும் இறக்குமதி செய்யப்பட்ட அழகு சாதன பொருட் கள் இருந்ததை கண்டு பிடித்தனர். இதில் இந்துஸ்தான் லீவர் நிறுவனம் இந்தியாவில் காப்பு ரிமை பெற்ற பொருட்க ளான சோப்புகள், க்ரீம் கள், லோசன்கள், ஸ்பிரே உள்ளிட்டவற்றை அதிகாரி கள் வழக்கு பதிந்து பொருட் களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
இது போல கடந்த 9ம் தேதியன்று கன்னூரை சேர்ந்த பிரின்ஸ் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனத்துக்காக துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோக உருக்கு கழிவுகள் வந்த 8 கன்டெய்னர்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர். அவற்றிற்குள் இரும்பு ராடுகள் மற்றும் டிஎம்டி கம்பிகள் இருந்தன.
இதில் 5 அடி நீளம் முதல் 13 அடி நீளம் வரையுள்ள 232.83 மெட்ரிக் டன் எடையிலான இரும்பு ராடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய் தனர். விசாரணையில் அவை ரூ.4 லட்சம் சுங்க வரி ஏய்ப்பு செய்வதற்காக இரும்பு கழிவுகள் போர்வை யில் கடத்தி வரப்பட்டுள் ளது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.43 லட்சம் ஆகும்.
மேலும் டெல்லியை சேர்ந்த இரு நிறுவனங்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய்க்கு பெண் கள் அணியும் ஸ்கார்ப்கள் என்ற பெயரில் தரம் குறைந்த துணிகளை அனுப்ப முயன் றதை கண்டு பிடித்தனர். அதன் மதிப்பு ரூ.2.50 கோடி என மதிப்பிடப்பட்டு அதற் காக தவறான உறுதி மொழி படிவம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
ஆனால் இதன் உண்மையான மதிப்பு ரூ. 68 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசி டம் இருந்து மோசடியாக பெற இருந்த ரூ.27 லட்சம் ஏற்றுமதி மானியம் விரையமாவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தொடர்பு டைய நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1 கோடியே 60 லட்சம் ஆகும்.