தூத்துக்குடி அருகே, 3 வயது குழந்தையுடன் திருமணமான பெண்ணை கடத்திச் சென்ற கள்ளக் காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே நரசன்விளையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(60). இவர், தெற்கு ஆத்தூரில் லாண்டரி கடை வைத்துள்ளார். இவரின் மகள் கோகிலா(22)வை கடந்த 4 வருடத்திற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த பூசமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பூசமணியுடன் வாழ்ந்து வந்த கோகிலாவிற்கு ஆதி(3) என்னும் ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே, பூசமணி வெளிநாட்டில் வேலை கிடைத்ததால், சவுதி ஆரேபியாவிற்கு சென்றுவிட்டார். அதன் காரணமாக, கோகிலா தனது குழந்தை ஆதியுடன் தனது தந்தை ஊரான நரசன்விளைக்கு சென்று வசித்து வந்தார்.
அப்போது, அதே ஊரைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் நடராஜன் மகன் கண்ணன்(25) என்பவரோடு கோகிலாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 14ம் தேதி பொங்கல் தினத்தன்று கோகிலாவின் தந்தையும், தாயும் தெற்கு ஆத்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அந்த நேரத்தை பயன்படுத்தி கோகிலாவையும், அவளது மகன் ஆதியையும் கண்ணன் கடத்திச் சென்றுவிட்டார். மேலும், வீட்டை விட்டு கள்ளக்காதலனுடன் கோகிலா செல்லும் போது வீட்டில் இருந்த ரூ.17 ஆயிரம் ரொக்கப்பணம், 9.5 சவரன் தங்கநகைகளுடன் சென்றுவிட்டாள்.
இதனையடுத்து, குழந்தையுடன் கோகிலாவை, அவரது பெற்றௌர்கள் பல இடங்கிலும் தேடியும், கிடைக்காததால் ஆத்தூர் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.