News

தமிழகத்தை கலக்கிய திருட்டுக் கும்பல்: போலீஸ்காரர் மனைவி உட்பட 10பேர் கைது!
January 7, 2010, 3:30 PM
 

தமிழகத்தின் பல பகுதிகளில் பாத்திரக்கடைகள் மற்றும் துணிக்கடைகளில் திருடிவந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டம், நாங்கு நேரியில் பல இடங்களில் உள்ள பாத்திரக்கடைகள் மற்றும் துணிக்கடைகளில் அடிக்கடி திருடு போவதாக வந்த தகவலையடுத்து, திருட்டுக் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்ட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று நாங்குநேரி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சேதுங்கநலலூரைச் சேர்ந்த மாதாக்கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலும், அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருட்டை குலத் தொழிலாக செய்து வந்ததும் தெரியவந்தது.
 
மேலும், இவர்கள் நான்குநேரி, மூலைக்கரைப்பட்டி, திருநெல்வேலி டவுண், பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள் மற்றும் பாத்திரக் கடைகளில் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. திருடிய பொருட்களை பெருமாள் புரம் காவல்நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் பெருமாள் என்பவரின் மனைவி அங்கம்மாள் (45) என்பவர் மூலமாக விற்று வந்துள்ளனர்.

அங்கம்மாளை போலீசார் கைது செய்து விசாரித்ததில் செய்துங்கநல்லூர், ஆதிச்சநல்லூர், முரப்பனாடு, கருங்குளம் ஊரைச் சேர்ந்த 50க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த திருட்டுத் தொழில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இவர்கள் தமிழகத்தின் பல இடங்களில் சென்று தங்கி இருந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
 
இந்த கும்பலைச் சேர்ந்த பெண்கள் பாத்திரக்கடை, துணிக்கடை, செருப்புக் கடை போன்றவற்றில் சென்று பொருட்கள் வாங்குவது போல சென்று தாங்கள் கொண்டு சென்ற பிக்சாப்பர் பைகளில் சேலை, சாரம், பேண்ட், போன்ற துணிமணிகளை போட்டு வெளியில் நிற்கும் ஆண்களிடம் கொடுத்துவிடுவர்.  இதுபோல திருடிய பொருட்களை மொத்தமாக ஊருக்குக் கொண்டு சென்று மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்று லாபத்தை பங்கு போட்டுக் கொள்வர்.
 
 
இது தொடர்பாக, ஆறுமுகம் (42),  உச்சிமாகாளி (38), வேல்முருகன் (23), வேம்பு (14), பார்வதி (37), லட்சுமி அம்மாள் (50), சீதை அம்மாள் (48), முருகன் (35), கோபால் (40, ஜாண் (50), ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 50 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்வா, திருநெல்வேலி

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.