News

ஆள்மாறாட்டத்தில் எஸ்ஐ. கொலை: போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம்!
January 8, 2010, 7:06 PM
 
நெல்லை அருகே ஆள் மாறாட்டத்தில் சப். இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக கடையம் சப்.இன்ஸ்பெக்டர் மனைவியின் உறவினர்கள் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
 
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சப்.இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வெற்றிவேல் (42). நேற்று கோதைசேரி பகுதியில் இலவச வேட்டி சேலை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக அம்பை தாலுகா அலுவலகத்திற்கும் பின்னர் ஒரு வழக்கு தொடர்பாக அம்பை கோர்ட்டில் சாட்சியம் அளித்து விட்டு மதியம் 2.45 மணிக்கு பைக்கில் ஆழ்வார்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார். ஆம்பூர் அருகே ஆழ்வார்குறிச்சி ஆற்றுப்பாலத்தை கடந்து வந்த போது அங்கு புதரில் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல், வெற்றிவேல் மீது திடீரென வெடிகுண்டுகளை வீசியது.
 
இதில் அவரது வலது கால் சிதைந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அந்த கும்பல், வெற்றிவேலை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. கழுத்தில் வெட்டுப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அப்போது அந்த வழியாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான், கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் கடையநல்லூர் மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக அம்பையிலிருந்து காரில் வந்தனர். இதைப்பார்த்த கும்பல் பைக்குகளை போட்டு விட்டு தப்பி ஓடினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெற்றிவேலை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.  இதற்கிடையில் அமைச்சருடன் வந்த பாதுகாப்பு படை வீரர்கள் தப்பியோடிய கும்பலை விரட்டிச் சென்றனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை கீழே போட்டு விட்டு ஓடினர். மேலும் அவர்களில் ஒருவன், பாதுகாப்பு படை வீரர்கள் கார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினான். இதில் கார் லேசான சேதம் அடைந்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர் ஒருவர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் யார் மீதும் குண்டு பாய வில்லை.  6 பேரும் ஆற்றை கடந்து அங்குள்ள வாழைத்தோட்டம் வழியாக தப்பியோடி விட்டனர். தகவல் அறிந்ததும் நெல்லை டி.ஐ.ஜி. கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ராகர்க் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

இதில், சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆள் மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.கடையம் காவல் நிலை யத்தில் சப்.இன்ஸ்பெக்ட ராக வேலை பார்க்கும் சிவ சுப்பிரமணியன் என்பவர், ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளத் தெருவைச் சேர்ந்த ஆறு முகத்தேவர் மகளை திரு மணம் செய்திருந்தார். கருத்து வேறுபாடு காரண மாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். மனைவி கொடுத்த புகாரின் பேரில் சிவசுப்பிர மணியன் மீது கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு நடந்து வருகிறது. இதுதொடர்பாக சஸ் பெண்ட் செய்யப்பட்ட சிவ சுப்பிரமணியன் ஐகோர்ட் உத்தரவின் பேரில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
 
இதையடுத்து மனைவியின் உறவினர்கள், சிவசுப்பிர மணியனை சந்தித்து அவருடன் சேர்ந்து வாழும்படி  கூறியுள்ளனர். ஆனால் அதற்கு  அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.இதைத்தொடர்ந்து அவரை பழிவாங்க திட்ட மிட்டனர். சிவசுப்பிரமணியன் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்வார்.அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று திட்டமிட்ட மனைவியின் உறவினர்கள் வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயு தங்களுடன் ஆழ்வார் குறிச்சிக்கு வந்துள்ளனர்.  சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேலும், சிவசுப்பிர மணியனை போன்றே உடல்வாகு கொண்டவர். மேலும் வெற்றிவேலும் சாலைபாதுகாப்பு வாரத் தையடுத்து நேற்று ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வந்துள்ளார்.

முகத்தை ஹெல்மெட் மறைத்திருந்ததால் அடை யாளம் தெரியாமல் சிவசுப் பிரமணியன்தான் வருகிறார் என்று நினைத்த அந்த கும்பல், அவர் மீது வெடிகுண்டு களை வீசி, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டது. ஹெல்மெட்டால் ஏற்பட்ட குழப்பம் வெற்றி வேல் உயிரை பறித்து விட்டது.கொலையாளிகள் விட்டுச் சென்ற 2 பைக்குகள், நாட்டு, பைப் வெடிகுண்டுகள், அரிவாள்கள் கைப்பற்றப்பட்டது. பைக்கில் இருந்த ஆர்.சி.புக்கில் ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகதேவர் மகன் கந்தசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கொலையாளிகளை உறுதி செய்த போலீசார் ஸ்ரீவை குண்டம் சென்று சிவசுப்பிர மணியன் மனைவியின் உறவினர்கள் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின் றனர்.
 

 
போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம், கொலை செய்யப்பட்ட வெற்றிவேலின் சொந்த ஊர் சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் ஆகும். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், அசோக்குமார் (15) என்ற மகனும், சிந்துபாரதி (13) என்ற மகளும் உள்ளனர். மனைவியின் ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள முள்ளிகுளத்தில் வெற்றிவேல் குடும்பத்துடன் வசித்து வந்தார். மகன் அசோக்குமார் 8.ம் வகுப் பும், மகள் சிந்து 4.ம் வகுப்பும் படிக்கின்றனர்.
 
வெற்றிவேல் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுத காட்சி பரிதாப மாக இருந்தது. வெற்றிவேலின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

டி.ஐ.ஜி. கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ராகர்க் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மனைவியின் ஊரான முள்ளிகுளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
வள்ளிமனவாளன்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.