நெல்லை மாவட்டம் ஆழ்வார் குறிச்சி எஸ்.ஐ கொலை வழக்கில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ உட்பட 3 பேர் கைது மேலும் 10 பேருக்கு வலைவீசி தேடி வருவதாக தமிழக காவல்துறை ஏ.டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் நெல்லையில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஆழ்வார் குறிச்சி காவல் நிலைய எஸ்.ஐ வெற்றிவேல் என்பவர் கடந்த 7 ம் தேதி மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டிவும் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனிப்படையினரிடம் சிக்கியவர்களிடம் விசாரணை நடத்த தமிழக சட்டம் ஓழுங்கு ஏ.டி.ஜி.பி இன்று நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ வெற்றிவேல் கொலை வழக்கு தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் கடையம் எஸ்.ஐ சிவசுப்பிரமணியன் மனைவி சிவகாமி உட்பட 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிவகாமி அண்ணன் கந்தசாமி(42) அவருக்கு ஆழ்வார்குறிச்சி பகுதியில் தங்க இடமளித்து உதவிய கள்ளபிரான் மற்றும் இப்படுகொலை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட நெல்லை ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம்(62) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் வெற்றிவேல் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஆள்மாறாட்டத்தின் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.என்றும் மேலும் நெல்லை மாவட்டத்தில் தான் அதிக அளவில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் முன்பகை காரணமாக நடைபெற இருந்த பல்வேறு கொலைகள் போலீஸாரின் தீவிர முயற்சியால் தடுக்கப்பட்டிருந்தாலும் இது குடும்ப பகை என்பதால் உரிய நேரத்தில் போலீஸாரால் தடுக்க முடியவில்லை.வெற்றிவேலை காப்பாற்றவும் குற்றவாளிகளை பிடிக்கவும் போரடிய பாதுகாப்பு போலீஸாருக்கு விருது கிடைக்க பரிந்துரை செய்யப்படும். அடையாள அணிவகுப்பில் குற்றவாளிகளை ஈடுபடுத்த உள்ளதால் குற்றவாளிகளை காட்ட இயலாது என அவர் தெரிவித்தார். பேட்டியின்போது தென்மண்டல ஐ.ஜி கிருஷ்ண மூர்த்தி, நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன், மாவட்ட எஸ்பி, ஆஸ்ராகர்க் ஆகியோர் உடனைருந்தனர்.