ஆழ்வார்குறிச்சி சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கடந்த 7ம் தேதி கொலை செய்யப்பட்டார்.அவரது குடும்பத்தினருக்கு ஏடிஜிபி நேரில் ஆறுதல் கூறினார்.
தமிழக ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் நேற்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து புளியங்குடி அருகே உள்ள முள்ளிகுளத்தில் உள்ள சப். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வீட்டிற்கு சென்றார். பின்னர் வெற்றிவேல் மனைவி பிரேமா, மகன் அசோக்குமார், மகள் சிந்துபாரதி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் அரசு வேலைவாய்ப்பு பெற உடனடியாக விண்ணப்பிக்கு மாறு பிரேமாவிடம் கூறினார். இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவை அரசு ஏற்று நடத்தும். இந்த குழந்தைகள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றார். மேலும் முதல்வர் நிவாரண நிதி ரூ. 2 லட்சமும், வீரமரணம் அடைந்தோருக்காக ரூ. 5லட்சமும் விரைவில் கிடைக்கும் என்றார்.
முன்னதாக ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் மதுரை மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி, நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன் ஆகியோர் சப்.இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.