News

ரோட்டோரம் கிடந்த ரூ.1 லட்சத்தை ஒப்படைத்த லட்சிய மனிதர்:எஸ்.பி.பாராட்டு!
January 13, 2010, 9:44 AM

 சாலையில் கண்டெடுத்த ரூ. 1 லட்சத்தை, காவல்துறையில் ஒப்படைத்த கடலூர் கோழிப்பண்ணை உரிமையாளர் காத்தமுத்துவை, மாவட்டக் காவல் கண்கணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் பாராட்டினார்.

கடலூர் வண்டிப்பாளையம் புருகீஸ்பேட்டையில் நாட்டுக் கோழிப் பண்ணை வைத்து இருப்பவர் காத்தமுத்து (45). அவர் செவ்வாய்க்கிழமை கடலூர் பாரதி சாலையில் நடந்துச் சென்று கொண்டு இருந்தார்.நகராட்சி பூங்கா எதிரில் சாலையோரம் பிளாஸ்டிக் பை ஒன்று கிடந்தது. அதைக் காத்தமுத்து எடுத்துப் பார்த்தார்.

பிளாஸ்டிக் பைக்குள் ஒரு மஞ்சள் துணிப் பையும் அதற்குள் ரூ. 1 லட்சம் பணமும் (ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டு) இருந்தது. இது குறித்து காத்தமுத்து தனது நண்பர்களுக்குத் தெரிவித்து விட்டு, நேராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸச் சந்தித்து பணத்தை ஒப்படைத்தார். காத்தமுத்துவின் நேர்மையை எஸ்.பி. வெகுவாகப் பாராட்டினார்.

பா.ம.க. பிரமுகரான  காத்தமுத்து, கடலூர் திரைப்பட இயக்க நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.