திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்த கர்நாடக அமைச்சரின் நெருங்கிய உறவினர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நேற்றிரவு கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் பக்தர்கள் முண்டியடித்துச் சென்றதால் பயங்கர நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. கர்நாடக அமைச்சரின் நெருங்கிய உறவினர் ஒருவர் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தார். அவரை திருப்பதி திருமலை தேவஸ்தான (டிடிடி) ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து டிடிடி அதிகாரிகள் கூறும் போது, “அவர் கோயில் வளாகத்திற்குள் உயிரிழக்கவில்லை. கோவிலுக்கு வெளியேதான் இறந்ததார்” என்றனர். இதற்கிடையே எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் தர்ணா போராட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.