News

ஆந்திராவுக்கு செல்லாதீர்கள்: அமெரிக்க அரசு எச்சரிக்கை!
December 30, 2009, 11:09 AM
தனித் தெலுங்கானா கோரி போராடி வரும் ஆந்திராவுக்குள் அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா செல்லும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு விடுத்துள்ள எச்சரிக்கையில், “பயங்கரவாத குழுக்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அரசுக்கு தொடர்ந்து உளவுத் தகவல் வருகிறது. குறிப்பாக அமெரிக்கர்கள், மேலைநாட்டினர் இந்தியாவில் அதிகம் விரும்பும் இடங்களை குறிவைத்துத் தாக்கவே பயங்கரவாதிகள் திட்டமிடுகின்றனர்.

மேலும், ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரிக்கை தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு கலவரம் ஏற்படலாம். எனவே, ஆந்திராவுக்குள் செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.