|
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தீவிபத்து!
December 30, 2009, 11:52 AM
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாயினர்.
டிராம்பேவியில் உள்ள இந்த மையத்தில் உள்ள வேதியல் ஆய்வுக் கூடத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், இதனால் கதிர்வீசசு கசிவு ஏதும் ஏற்படவில்லை என்று பாபா ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மையத்தின் 3வது மாடியில் தான் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், 45 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த மையத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பலியான இரு ஊழியர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சாம்பலாகிவிட்டன. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக இந்த மையம் மிக பலத்த பாதுகாப்பில் உள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
|