|
தெலங்கானாவில் பந்த் : இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!
December 30, 2009, 12:23 PM
தெலங்கானா குறித்து மத்திய அரசு எந்த ஒரு முடிவும் அறிவிக்காத நிலையில் தெலங்கானா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பந்த் நடத்தப்படுகிறது. பந்த காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன, வர்த்தக மையங்கள் மற்றும் அலுவலங்கள் மூடப்பட்டன.
மேலும் பந்த காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 165 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தெலங்கானாவில் இயல்பு வாழ்க்கை திரும்ப போராட்டகாரர்களிடம் பேச்சவார்ததை நடத்தமாறு ஆந்திர முதல்வர் ரோசய்யாவிற்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஒரு வாரத்திற்குள் தெலங்கானாவில் 144 தடை உத்தரவுகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|