|
ஜார்கண்ட்: சிபுசோரன் பதவியேற்பு!
December 30, 2009, 12:40 PM
ஜார்கண்ட் மாநில முதல்வராக சிபுசோரன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
81 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் கடந்த 5 நாட்களாக ஆட்சி அமைப்பது யார்? என்பதில் இழுபறி நீடித்தது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான மாய எண் 41&ஐ பெற காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பா.ஜ. தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டு, ராஜ்நாத் சிங், அனந்த்குமாரை உடனடியாக ராஞ்சிக்கு அனுப்பியது. இதையடுத்து பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிபுசோரன் ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்துடன் பா.ஜ. கூட்டணி கட்சியான ஜனதாதளம் (ஐ) கட்சியையும் சேர்த்தால் மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது.
மேலும் ஆளுநர் சங்கரநாராயணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனையடுத்து ஜார்கண்டில் 3வது முறையாக சிபுசோரன் முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் சங்கரநாராயணன், சிபுசோரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
|