சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று இரவு 7 மணிக்கு கோயில் நடைசாத்தப்படுகிறது. நாளை (1ம் தேதி) அதிகாலை 1.45 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும். அதன் பின்னர் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
புத்தாண்டையொட்டி நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.