"என் மீதான குற்றச்சாற்றுக்கு எனது மரணம்தான் பதில் சொல்லும்", என பாலியல் குற்றச்சாற்றில் சிக்கி பதவியை இழந்த ஆந்திர முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு என்.டி.திவாரி அளித்துள்ள பேட்டியில், “என் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார்கள் அனைத்தும் முழுக்க, முழுக்க உண்மைக்கு புறம்பானவை. இந்த புகார்களால், வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நான் மிகவும் நொந்து போய் இருக்கிறேன். என்னுடைய மரணம்தான் இந்த குற்றச்சாற்றுகளுக்கு பதில் சொல்லும்” என்று கூறியுள்ளார்.