News

வங்கதேச முத்தரப்பு தொடர்: ஜன.4ல் துவக்கம்
January 2, 2010, 11:15 AM

வங்கதேசத்தில், நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருதின போட்டி மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி ஆகியவை நியோ தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன.

முத்தரப்பு போட்டி ஜனவரி 4ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி மீர்பூரில் நடைபெறுகிறது. இதில் இலங்கை, வங்கதேச அணிகள் மோதுகின்றன. 5ம் தேதி இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

முத்தரப்பு போட்டி விவரம்:

ஜனவரி 4: வங்கதேசம் - இலங்கை

ஜனவரி 5: இந்தியா - இலங்கை

ஜனவரி 8: வங்கதேசம் - இலங்கை

ஜனவரி 10: இலங்கை - இந்தியா

ஜனவரி 11: வங்கதேசம் - இந்தியா

ஜனவரி 13: இறுதிப் போட்டி

இப்போட்டிகள் பகல் 12.30 மணிக்கு தொடங்கும்.

டெஸ்ட் போட்டி: ஜனவரி 17-21, இந்தியா - வங்கதேசம் - சிட்டகாங், காலை 8.

இரண்டாவது போட்டி ஜனவரி 24-28, மீர்பூர், காலை 8.

இலங்கை அணியில் மாற்றம்: வங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருதின போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் ஆல்-ரவுண்டர் சனத் ஜயசூர்யா, பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, சுழற் பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் மற்றும் சமர கபுகேத்ரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சமர சில்வா, மலிங்கா பண்டாரா, லஹிரு திரிமணே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன், மூத்த வீரர்கள் ஜயவர்த்தனே, ஏஞ்சலோ மாத்யூஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தில்ஹாரா பெர்ணான்டோ ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இந்தியாவுடன் நடந்த போட்டியில் பங்கேற்ற இளம் வீரர்கள் பெரேரா, சீமெர், சுராங்கா லக்மல் மற்றும் சூரஜ் ரணதேவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி: குமார் சங்ககரா, தில்ஷன், தரங்கா, சமரவீரா, சமர சில்வா, கண்டாம்பி, லஹிரு திரிமணே, புஷ்பகுமார, பெரேரா, மலிங்கா பண்டாரா, நுவன் குலசேகரா, துஷாரா, ரணதேவ், சுராங்கா லக்மல், வெளிகேதரா.

வங்கதேச அணி: ஒருதின போட்டிக்கான வங்கதேச அணி வீரர்களின் பட்டியல்: ஷாகிப் அல் ஹாசன் (கேப்டன்), முஷாஃபிக்குர் ரஹ்மான் (துணை கேப்டன்), முகமது அஷ்ரபுஃல், தமீம் இக்பால், ரகிபுல் ஹசன், மகமுத்துல்லா, ரியாத் நயீம் இஸ்லாம், அப்துர் ரசாக், சையத் ரசெல், நஸ்புல் ஹுசைன், ரூபல் ஹுசைன், இம்ருல் கயஸ், ஷராரிரார் நஃபீஸ், அப்டாப் அகமது, ஷஃபிபுல் இஸ்லாம்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.