News

இந்தியா வந்துகொண்டிருந்த கப்பல் கடத்தல்: கொள்ளையர்கள் கைவரிசை!
January 2, 2010, 3:16 PM

24 சிப்பந்திகளுடன் இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் கப்பல் ஒன்றினை, சோமாலியா கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இரசாயனம் ஏற்றிய டேங்கர் கப்பல் ஒன்று, இத்தாலியிலுள்ள ஜெனோவா என்ற இடத்திலிருந்து இந்தியாவிலுள்ள கண்ட்லா என்ற இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.

ஏமன் வளைகுடாப் பகுதியில் அந்த கப்பல் வந்துகொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்து சோமாலியக் கடல் கொள்ளையர்கள், அக்கப்பலை சுற்றிவளைத்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

பின்னர் அக்கப்பலை கடத்திச் சென்றனர்.கடத்திச் செல்லப்பட்ட கப்பலில் உள்ள 24 சிப்பந்திகளில் 17 பேர் இநதோனேஷியர்கள், ஐந்து பேர் சீனர்கள் மற்றும் நைஜீரியா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த தலா ஒருவர் என சிங்கப்பூர் கப்பல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு பிறந்த இரு தினங்களே ஆகியுள்ள நிலையில், இந்த ஆண்டில் சோமாலியக் கொள்ளையர்கள் அரங்கேற்றியுள்ள முதல் கடத்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.