News

தில்ஷன் அதிரடி சதம்: இலங்கை அபார வெற்றி!
January 5, 2010, 11:00 AM

தில்ஷன் அதிரடி சதம் விளாச முத்தரப்பு தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை முதலில் பந்து வீசியது. வங்கதேச தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், இம்ருல் கேயஸ் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 65 ரன் சேர்த்தனர்.
 
இம்ருல் 23 ரன், இக்பால் 40 ரன் எடுத்தனர். ரகிபுல் ஹசன் (0), ஷாகிப் அல்ஷசன் (1) இருவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, வங்கதேசம் 74 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. அஷ்ராபுல் & முஷ்பிகுர் ரகிம் ஜோடி 5வது விக்கெட்டுக்கு போராடியது.
 
முஷ்பிகுர் 35, மகமதுல்லா 45 ரன் எடுத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த அஷ்ராபுல் 75 ரன் எடுத்து (94 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். வங்கதேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன் குவித்தது. நயீம் இஸ்லாம் 22 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), அப்துர் ரசாக் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை 44.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து வென்றது. தரங்கா 14, கேப்டன் சங்கக்கரா 74 (73 பந்து, 10 பவுண்டரி) ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய தில்ஷன் 104 ரன் (122 பந்து, 12 பவுண்டரி) விளாசினார்.
சமரவீரா 41, சில்வா 4 ரன் னுடன் ஆட்ட மிழக்காமல் இருந்தனர்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.