News

விஷ்ணுவர்தன் மனை‌வி‌க்கு ரஜினி ஆறுத‌ல்
January 7, 2010, 1:08 PM

கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் பெங்களூரு ஜெயநகரில் உள்ள விஷ்ணுவர்தன் வீட்டுக்கு நேற்று மாலை வந்தார்.

இருவரும் விஷ்ணுவர்தனின் மனைவி பாரதியிடம் துக்கம் விசாரித்து, அவருக்கு ஆறுதல் கூறின‌ர். கன்னட நடிகர் அம்பரீசும் அப்போது உடன் இருந்தார். சுமார் 15 நிமிடங்கள் விஷ்ணுவர்தனின் வீட்டில் இருந்த ரஜினிகாந்த், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், "32 ஆண்டு கால நண்பரான விஷ்ணுவர்தன் என்னை அவருடைய இளைய சகோதரர் போல் நடத்தினார். அவருடைய திடீர் மறைவு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது'' என்றா‌ர்


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.