விமானக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விமானங்களை கடத்தும் சதிகாரர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக புதுடெல்லியில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முடிவில் விமான கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதற்கு சட்ட திருத்தம் கொண்டுவருவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.