News

நமக்கு நாமே மின்சாரம் தயாரிக்கும் கருவி: நெல்லையில் அறிமுகம்
September 13, 2009, 12:04 PM

 நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம் என்று, சிரிய காற்றாலைகளை உருவாக்கி சாதணை புரிந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த ஆல்பா என்ஜினியரிங் நிறுவனத்தினர். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுமார் 1 கிலோ வாட் முதல் 10 கிலோ வாட் வரை மின் உற்பத்தி செய்யும் திறன் கெண்ட சுமார் 20 ஆண்டுகள் உழைக்கும் திறன் கொன்ட காற்றாலைகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆல்பா என்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவன‌த்தின் இயக்குனர் சுகவனேஷ்வரன், சாதாரண குடியிருப்புகள் முதல் பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகள்,  வணிகவளாகங்கள், மருத்துவமணைகள், கல்வி நிறுவனங்கள்,தகவல் தொழில் நுட்ப கூடங்கள் மேலும், ஊரகப் பகுதிகள், மலைவாழ் மக்களின் மின்சார தேவைகளையும் பூர்த்தி செய்ய இது மிகவும் ஏற்றதாக விளங்கும் என்றார். தெழில் நுட்ப இயக்குனர் ரஜினி பிரகாஷ், மார்கெட்டிங் மேலாளர் இரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    
கடுமையான மின்சார பற்றாக்குறையினால் தமிழகம் திண்டாடி வரும் வேளையில்,தினமும் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை மின் வெட்டு செய்யப்படுகிறது. மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வரும் வேளையில் ஆல்பா என்ஜினியரிங் த‌ற்போது அறிமுக‌ப் ப‌டுத்தியுள்ள‌ சிறிய‌ வ‌கையிலான‌ காற்றாலை மின் உற்பத்தி  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.

செல்வா,நெல்லை

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.