திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை மிரட்டி வந்த 100 பாம்புகளை இன்று பாம்பாட்டியினர் பிடித்தனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதி மற்றும் பிணவறை ஆகிய பகுதிகளில் அடிக்கடி பாம்புகளின் நடமாட்டம் இருந்து வந்தது. இப் பகுதியில் முட்புதர்கள் அதிகமாக உள்ளதால் பாம்புகள் சாதாரணமாக நோயாளிகளையும்,மருத்துவ பணியாளர்களையும் மிரட்டி வந்தன.
இந்நிலையில் இன்று காலையில் திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வரும் பாம்பாட்டியினர் நல்லபாம்பு, கட்டுவீரியன், சாரைப்பாம்பு உள்ளிட்ட 100 பாம்புகளை இன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் பிடித்தனர். இதனை அப்பகுதியில் இருந்து பார்த்த பொதுமக்களும், நோயாளிகளும் அலறியடித்து ஓடினர்.