News

தூத்துக்குடி மீனவர் வலையில் சிக்கிய அதிசய நண்டு!
October 9, 2009, 9:45 AM
 
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை நண்டு ஒன்று சிக்கியது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவர் கில்டன். இவர், சில மீனவர்களுடன் நேற்று படகில் மீன் பிடிக்கச் சென்றார். கடலில் சுமார் 30கிமீ தொலைவில் மீன் பிடித்துவிட்டு திரும்பினர். அப்போது, வலையில் இருந்த மீன்களை பார்த்தபோது, அதில் வித்தியாசமான தோற்றத்துடன் ஒரு நண்டு ஒன்றி சிக்கியிருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தார்.

பொன்னிறத்தில் தவளை போன்ற தோற்றத்துடன் இருந்த அந்த நண்டு சுமார் 500கிராம் எடையுடன் காணப்பட்டது. இந்த அரிய வகை நண்டு குறித்து உடனடியாக கடல் மீன் ஆராய்ச்சி நிலயத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடல் மீன் ஆராய்ச்சி நிலயத்தினர் அந்த நண்டை ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், ஆஸ்திரேலிய கடற்பகுதியில் இந்த அரிய வகை நண்டுகள் அதிகளவில் காணப்படும். இதன் உயிரியல் பெயர் "ராணினா ராணினா",  இதனை தவளை நண்டு என்று அழைப்பார்கள் என தெரிவித்தனர். 

சக்திமுருகன்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.