News

4 நாட்களாக காதல் களியாட்டம்! பாம்புகளின் அட்டகாசம்: பார்வையாளர்கள் ஆர்வம்
October 28, 2009, 3:15 PM
 
ஓட்டப்பிடாரம் அருகே தொடர்ந்து 4 நாட்களாக காதல் களியாட்டம் செய்யும் நல்லபாம்பு மற்றும் மஞ்சள் சாரைப் பாம்புகளால் அப்பகுதியில் உள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் கீரைத்தோட்டம் பகுதியில் சிவலிங்கம் என்பவரின் வீட்டு மனை உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக கற்கள் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த கற்குவியலில் அதிகமான பாம்புகள் உள்ளன.

இதற்கிடையே, கடந்த 4 நாட்களாக, 2 ஜோடி பாம்புகள் காதல் களியாட்டம் செய்து வருவது அப்பகுதி மக்கள் பெரும் ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர். சுமார் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்புகளும்,  6 அடி நீளமுள்ள மஞ்சள் சாரைப் பாம்புகள், மாலை நேரத்தில் வெளியே வருகின்றன. பின்னர், தங்கள் ஜோடிகளுடன் ஓன்றுடன் ஓன்றாக பின்னி பிணைந்து ஆடிவருகிறது.

அப்போது, அந்த பாம்புகளை பார்வையாளர்கள் சிலர் விரட்டினாலும், கல்லால் தாக்கினாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தங்கள் காதல் களியாட்டத்தை தொடர்ந்து வருகிறது. சுமார் 1 மணிநேரம் தங்கள் களியாட்டத்தை முடித்தபின், அங்கு குவித்து வைக்கப்பட்டு இருக்கும் கல்குவியலுக்குள் சென்று விடுகின்றன.

இந்த பாம்புகளின் காதல் களியாட்டம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் கண்டு ரசித்துவருகின்றனர்.

சக்திமுருகன்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.