News

விவசாயி தோட்டத்தில் அதிசய முருங்கை!
October 29, 2009, 11:21 AM

சாத்தான்குளம் அருகே, விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள மரத்தில் முடிச்சுடன் முருங்கைக்காய் காய்த்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் நம்பிராஜ். விவசாயியான இவரது தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் அதிசய முருங்கை காய்கள் காய்த்துள்ளன. அந்த மரத்தில் முடிச்சுகளுடன் காய்கள் காய்த்து அவரை வியப்பில் ஆழ்த்தியது.
 
மூன்று முடிச்சுகளுடன் ஒரு காயும், அதன் அருகே ஒரு முடிச்சுடன் உள்ள ஒரு முருங்கை காயுமாக வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்ட அந்த அதிசய முருங்கைக் காயை சாத்தான்குளம் மார்கெட்டில் பார்வைக்கு வைத்துள்ளார்.

வித்தியாசமாக முடிச்சுடன் காணப்படும் அந்த முருங்கைகாயை  அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

கந்தன், திருச்செந்தூர்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.