பாம்பிற்கு கை இருப்பதே அதிசயம்... அதிலும் அந்த கைகளில் 5 விரல்கள் வீதம் இரு கைகளிலும் 10 விரல்களுடன் காட்சியளித்த ஒரு அதிசய பாம்பு பிடிபட்டதால் சங்கரன்கோவில் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஜெருசலேம் தர்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது தோட்டத்தில் புகுந்த பாம்பை அங்குள்ளவர்கள் அடித்துக் கொன்றனர். இறந்த பாம்பின் அருகில் சென்று பார்த்தபோது வித்தியாசமான தோற்றத்துடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பாம்பிற்கு இரண்டு கைகளும், அதில் 10 விரல்களும் இருந்தன. பாம்புராணியின் இனத்தைபோல் காணப்பட்ட அந்த பாம்பு சுமார் ஐந்தடி நீளம் இருந்தது. இப்படி ஒரு அதிசய பாம்பை காண அப்பகுதிமக்கள் ஏராளமானவர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.