நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் 30 ஆயிரத்து 170 கோடி மதிப்பில் 6 அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் 1998ம் ஆண்டு தொடங்கியது.
முதற்கட்டமாக 1000 மெகாவாட் உற்பத்தி திறனுடைய 2 அணு உலைகள் கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்து மின் உற்பத்திக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை பணிகளை ரஷ்யாவின் துணை பிரதம மந்திரி செர்ஜி எஸ்.சோபயானின் மற்றும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழக தலைவர் கிரியாங்கோ தலைமையிலான 11 பேர்கொண்ட ரஷ்ய குழுவினரும், இந்திய அணுமின் உற்பத்தி கழக தலைவர் ஜெயன், இந்திய அணுமின்உற்பத்தி கழக இயக்குநர் புரோகித், அணுமின் நிலைய மேலாளர் செல்லப்பா உட்பட்ட இந்திய குழுவினரும் ஆய்வு செய்தனர்.
பின்னர் ரஷ்ய நாட்டு குழுவினர் அங்கு நடைபெற்ற ஒருங்கினைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய துணை பிரதமர், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைகள் மிக உயர்ந்த தொழில் நுட்பத்துடன் பணிகள் நடைபெற்று வருவதாகவும்,கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று விட்டது தற்போது மின் உற்பத்தி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு அமைய உள்ள அணு உலைகள் இந்தியாவில் உள்ள மற்ற அணு உலைகளை விட மிகவும் மாறுபட்டது.
மேலும் அடுத்து வரும் புதிய தலை முறையினருக்கான புதிய தொழில் நுட்பத்துடன் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் பாதுகாப்பான தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் நுட்பத்தால் உருவான அணு உலை இதுவாகும். மேலும் 3 வது 4 வது அணு உலைகள் இந்திய ரஷ்ய தொழில் நுட்பத்துடன் விரைவில் அமையும். அதற்கான உடன் படிக்கை முடிவடைந்து இந்த ஆண்டு இறுதியில் அதற்கான பேச்சு வார்த்தை முடிவடையும் என்றார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3வது அணு உலை பணிக்கான கான்கிரிட் பணிகள் தொடங்க உள்ளது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு அணு உலை அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது மேலும் இந்தியாவில் மின் உற்பத்தி குறைவாக உள்ளதால் ரஷ்ய தொழில் நுட்பத்துடன் கூடிய அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது ஏன அவர் தெரிவித்தார்.