News

தமிழ்நாட்டிற்கு ஆபத்து: வைகோ ஆவேசம்!
December 4, 2009, 12:42 PM
 

திருச்செந்தூரில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து பேசும் போது, தமிழ்நாட்டில் உள்ள ஆபத்து, தற்போது திருச்செந்தூரில் அக்கிரமக்காரர்களை தட்டிக்கேட்கும் தொகுதியாக திருச்செந்தூர் அமையும்.

கிராமங்களில் தேர்தலுக்கு முந்தைய நாள் அதிகாலை 4 மணி வரை காவல் துறை துணையுடன் ஒவ்வொரு வீடு வீடாக பால் பாக்கெட் போடுவதைப் போல் கவர்களை போட்டு செல்கின்றனர். இந்த கலாச்சாரம் நாட்டிற்க்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும். கொள்கையை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். அதில் வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை.

கடந்த மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் இணைந்து ரூ.1200 கோடி தேர்தலில் செலவு செய்துள்ளது. இந்த பணம் எல்லாம் ஊழல் பணங்கள் அதையும் மீறி 12 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. வாக்காளர்கள் பணம் வாங்குவதை நான் குறை சொல்லவில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கின்றது. அதனால் தேர்தல் நேரங்களில் கொடுக்கப்படும் பணங்களை வாங்கிக் கொண்டு அவர்கள் குடும்பத்தில் உள்ள சில பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது.

பாவங்கள் தீர்க்கப்படவேண்டும் என்பதற்காக ஆலயம் செல்கிறோம். புன்னியத்தைத் தேடி செல்வதை போல் ஊழல் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிப்பது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல். அவர்கள் வழங்கப்படும் பணம் கட்சி நிதியோ அல்லது கட்சி பணமோ அல்ல. உங்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை வைத்து வாக்காளர்களை விலைபேசி அதன் மூலம் மீண்டும் பதவிக்கு வந்து கொள்ளையடிப்பதற்காக செய்யப்படும் சதி திட்டத்திற்கு பொது மக்கள் பலியாகி விடக்கூடாது.

1 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் அவர்கள் கையில் உள்ளது. அதையே போல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் குறைவு தான். சூரபத்மன் தன்னை யாராலும் அழிக்கமுடியாது என்று எண்ணிய வேளையில் அவனை அழித்தது போல் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் எதிர்களத்தில் நிற்கின்ற வேட்பாளரை நாம் அளிக்க வேண்டும்.  ஜனநாயகத்தை பாதுகாக்க பணநாயகத்திற்கு அடிமையாகி விடக்கூடாது. இவ்வாறு வைகோ பேசினார்.

கந்தன், திருச்செந்தூர்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.