News

தலைவலி என்பது ஒரு நோயல்ல
June 28, 2009, 12:45 PM

  
தலைவலி பொதுவாக பலர் அடிக்கடி சொல்லும் ஒரு குறைபாடு, தலை வலியை பலரும் அது ஒரு நோய் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் தலைவலி என்பது பெரும்பாலான சமயங்களில் ஒருநோயின் அறிகுறியாகத் தான் ஏற்படுகின்றது. சில நோயின் முன் அறிவிப்பாகக்கூட தலைவலி எடுக்கலாம்.

ரத்த அழுத்த நோயாளிகளுக்கு அவர்களின் உடல்நிலையை அறிவிக்கும் அபாய அறிவிப்பாகக்கூட தலை வலிக்கலாம். இதுபோன்று கழுத்துவலி, சைனஸ் பிரச்சினை, தலையில் அடி, மூளையில் கட்டி, கண்களில் குறைபாடு போன்ற காரணங்களினாலும் தலைவலி எடுக்கலாம். இன்னொன்று தெரியுமா? மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பத்திற்காக தலைவலிக்கும். இப்போது தெரிகிறதா தலைவலியின் தலைவிதி.

இன்னொரு தலைவலி இருக்கிறது. அதற்கு பித்த தலைவலி என்று பெயரா கும். ஓயாத அலைச்சல், தேநீர் அதிகம் குடிப்பது, அதிக நேரம் கண் விழித்திருத்தல் போன்றவையும் தலைவலிக்கு காரணகர்த்தாவாகலாம். சரி சார் இதுவரை நாம் சொன்னதெல்லாம் மிக மிக சாதாரண தலைவலிதான். தாங்க முடியாத தலைவலி என்று ஒன்று உண்டு. இவை பலவகைப்படும்.

ரத்தநாள தலைவலி, வலிப்பு நோயால் தலைவலி, டென்சன் தலைவலி, மனநோயின்போது தலைவலி, கண்ணின் அழுத்தத்தால் தலைவலி, சைனஸால் தலைவலி, ஒற்றைத்தலைவலி என்று பல வகைப்படும். இந்த குறைபாடுகளால் தலை வலிக்கும்போது அது தாங்க முடியாதது மாதிரி இருக்கும்.

மேலே நாம் சொன்ன தலைவலிக்கு எல்லாம் உரிய காரணத்தைக் கண்டு பிடித்து அதற்குரிய மருத்துவ சிகிச்சையினை வழங்கினால் அந்த குறிப்பிட்ட நோயும் போகும். மற்றும் தலைவலியும் நீங்கும்.

நம்நாட்டில் சுய மருத்துவம் என்கிற பெயரில் கண்ட கண்ட மருந்துகளை தலைவலிக்கு நாம் போட்டுக்கொள்ளும் வலிகொல்லி மாத்திரைகள் எல்லாம் உடம்பிற்கு பக்க விளைவினைத் தரக் கூடியது. தொடர்ந்து தலை வலித்தால் தற்காலிகமாக தடுத்துக் கொள்ளாமல் நிரந்தர தீர்வின் மூலம் மறுபடியும் தலைவலி வராமல் செய்து கொள்ளுங்கள்.

siva

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.