News

ப்யூட்டி பார்லர் போகாமலே நீங்கள் அழகாக சில டிப்ஸ்!
July 13, 2009, 12:57 PM
 

நமது வீட்டில் கைவசம் உள்ள பொருட்களை உபயோகித்தே  அழகாக முடியும். அதற்காக இதோ சில சூப்பர் அழகுக் குறிப்புகள்:

  1. கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் நிறைய பூண்டுப் பற்களை நசுக்கிப் போட்டு, சில துளிகள் ஆல்கஹாலையும் விட்டு கால்களை சிறிது நேரம் அதில் வைத்திருந்தால் கால்கள் மிருதுவாக மாறுவதோடு மட்டுமின்றி, தொற்றுக் கிருமிகள் தாக்காமலும் இருக்கும்
  2. கோதுமைத் தவிட்டுடன் கொஞ்சம் பாலும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்து முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் கருப்பாக உள்ள இடங்களைத் தேய்த்துக் கழுவினால் அந்த இடங்கள் வெளுக்கும்.
  3. பச்சைப் பயறை அரைத்து, தயிருடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு நிறைய தண்ணீர் விட்டுக் கூந்தலை அலசவும். விடாப்பிடியான பொடுகும் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
  4. வெங்காயத் தோலைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு ஆற விடவும். பிறகு அதை எடுத்துத் தலை முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறி அலசினால் தலை முடி ஒருவித சிவப்பு நிறத்தில் பளபளக்கும்.
  5. எலுமிச்சம் பழச்சாற்றில் கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். அதைத் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து, கூந்தலை அலச, பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுபோல மென்மையாகும்.
  6. சீரகத் தண்ணீரில் முக்கியெடுத்த பஞ்சினால் கண்களை ஒற்றி எடுக்க, களைப்படைந்து, சிவந்து, வீங்கிய கண்கள் சரியாகும்.
  7. சிறிதளவு சந்தனத்தையும், கற்பூரத்தையும் தண்ணீரில் குழைத்துக் கொண்டு அதை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக பருக்களின் மேல் தடவினால் குணமாகும்.
  8. காய்ச்சாத பாலுடன் ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாற்றைக் கலந்து கொள்ளவும். அதை உடம்பில் கருப்பாக உள்ள இடங்களில் தேய்த்து வர அந்த இடங்கள் சுத்தமாகும்.
  9. புதிதாகக் கிளம்பியுள்ள பருவின் மீது ஐஸ் கட்டியை வைத்து சுமார் நாற்பது நொடிகள் தேய்க்கவும். பிறகு அதன்மேல் கொஞ்சம் கிராம்புத் தைலம் தடவி அப்ப டியே விட்டு விடவும். பரு வந்த இடம் தெரி யாமல் மறைந்து விடும்.
  10. மிளகைப் பொடி செய்து பருக்களின் மேல் தடவி வர அவை உடன் குணமாகும்.
  11. வினிகரையும், தேனையும் சம அளவு கலந்து பற்களின் மீது அழுந்தத் தேய்த்துக் கழுவவும். பற்கள் பளீரென மின்னும்.
  12. கொஞ்சம் ஆலிவ் ஆயில், உப்பு, சோள மாவு மூன்றையும் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளவும். அதைக் கை களில் தடவி சிறிது நேரம் கழித்து, பன்னீர் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ, கைகள் பட்டுபோல மாறும்.
  13. தூள் உப்பை தலையில் மண்டை யோட்டில் படும்படி நன்றாக அழுந்தித் தேய்க்கவும். இது தலையில் உள்ள இறந்த செல்களையும், பொடுகையும் நீக்கும்.
  14. மாம்பழத் தோல்களை தூக்கி எறிந்து விடாமல், அவற்றை அப்படியே முகம் மற்றும் கைகளில் தேய்த்து ஊறிக் கழுவவும். சருமம் புத்துணர்வு பெறும்.
  15. கேரட்டை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் முகம் நல்ல நிறம் பெறும்.
  16. ஒரு டீஸ்பூன் அரிசியை அரைத்துத் தயிருடன் கலந்து கொள்ளவும்.அதை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி, முகம் தொய்வடைவதை யும் தவிர்க்கும்.
  17. மாவிலைகளை நசுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதை பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் அவை மறையும்.
தொகுப்பு: சிவராம்

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.