News

ஞாபக சக்தி வளர என்ன செய்ய வேண்டும்?
July 25, 2009, 3:52 PM
 
தாமரைப்பூவை தண்ணீர் விட்டு காய்ச்சி காலை மாலை இருவேளையும் குடித்து வந்தால் ஞாபகசக்தி வலுப்படும். தேகம் சிவப்பு நிறமாக மாறும்.
 
வல்லாரை கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி வளரும். மூளையில் உள்ள செல்களை வளர்க்கும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு.

தேங்காய்ப் பாலும் பாதாம் பருப்பும் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தி வலுப்படும். இரண்டு கரண்டி காரட் சாறு, பால் இரண்டு கரண்டி, தேன் இரண்டு தேக்கரண்டி கலந்து குடித்து வந்தால் ஞாபக சக்தி வளரும்

இலவங்கபட்டை சுக்கு இரண்டையும் போடி செய்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து காலை மாலை இரு வேளைகள் குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலையை இரவில் போட்டு வைத்து காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் மூளை பலம் பெரும். ஞாபகசக்தி பெருகும்.

வசம்பு, கீழாநெல்லி, மிளகு, தூதுவளை, அரிசி, திப்பிலி, கடுக்காய் இவைகளை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால் ஞாபகசக்தி, அறிவு விருத்தி ஏற்படும்.

பாலு, தூத்துக்குடி

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.