News

பாடாய் படுத்தும் நெஞ்செரிச்சல்... குணமாக என்ன வழி?
September 12, 2009, 11:44 AM
 
சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும், நெஞ்செரிச்சல் வரும் இதற்காக, மருந்து, மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்; அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றம் செய்தால் போதும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அவர்கள் கூறும் சிம்பிள் டிப்ஸ்:

இரண்டு வேளை மூக்கை பிடிக்க சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுங்கள். ஜீரணம் ஆகி விடும்.

சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். இரண்டு மணி நேரமாவது இடை வெளி விடுங்கள். படுக்கும் போது, கூடுதலாக ஒரு தலையணையை தலைக்கு வைத்து சற்று சாய்ந்தபடி படுங்கள்.

டைட்டான உடைகளை தவிர்த்து, தளர்ந்த சட்டை, பேன்ட்டை அணியவும்.

கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்கள், சிப்ஸ், கார வகைகள், ஜூஸ், மிளகு, மிளகாய், தக்காளி, "சிட்ரஸ்' வகை பழங்கள், மிட்டாய், காபி, மது ஆகியவற்றை கைவிட வேண்டும்.

இளைஞர்களுக்கு அடிக்கடி நெஞ்சு எரிச்சல் வந்தால், சாப்பிட்ட பின், 30 நிமிட நேரம் சூயிங்கத்தை மெல்ல வேணடும். அப்படி செய்தால், நெஞ்செரிச்சல், பாதியாக குறையும்.

குடலில் ஜீரணமாகாத உணவுகள் தேங்கி, அதன் மூலம், உணவுக் குழாயில் பாதிப்பு வருகிறது. ஆரம்பத்தில், அதில் ஆசிட் உருவாகி, நெஞ்செரிச்சல் வரும். பின், உணவுக் குழாயில் புற்றுநோயாக தலைதூக்கும்.

நெஞ்செரிச்சலை தொடர்ந்து, குடல் பாதிப்படையும் போது, குடலில் ட்யூப் விட்டு செய்யப்படும் சிகிச்சை உட்பட, பல வகை சிகிச்சைகள் உள்ளன. இருந்தும், அன்றாட வாழ்க்கையில் சிறிய அளவில் மாற்றம் கொண்டு வந்தால், பெரிய அளவில் பலன் கிடைக்கும்.

Siva

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.