News

நீங்களும் ஹீரோதான்! உங்களுக்கும் வேண்டுமா சிக்ஸ் பேக் அப்...?
September 22, 2009, 5:51 PM

தற்போதைய சினிமாக்களில் சிக்ஸ் பேக் அப் என்ற பெயரில் ஹீரோக்கள் தங்கள் உடலைக் கட்டுமஸ்தாகக் காட்டி வருகின்றனர்.

இந்த உடல் அமைப்பை நீங்களும் பெறலாம்.  அதற்கு சில டிப்ஸ்:

ஆரோக்கியமான உணவை மட்டும் நாம் எப்போதும் சாப்பிட்டு வர வேண்டும். தேவைக்கேற்பவோ அல்லது ருசிக்காகவோ கூட பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடக்கூடாது.

சிட்-அப்ஸ் உடற் தகுதிக்குரிய உடற் பயிற்சிகளை தவறாமல் தினமும் செய்து வர வேண்டும். உணவை நன்றாக மென்று தின்ன வேண்டும். தினமும் ஒரு நிமிடமாவது, நாம் செய்யும் வேலைகளில் ஏதாவது ஒரு வகையில் உடற் பயிற்சி செய்கிறோமோ என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதயத் தசைகளை வலுவடையச் செய்யும் வகையில் உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் போது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைத்து விடலாம். இதுவே உடலைக் கட்டுமஸ்தாக ஆக்குவதற்குரிய சிறந்த முறையாகும்.

கொழுப்பைக் குறைப்பதற்காக தேவையற்ற வழிமுறைகளில் வீணாகச் செலவு செய்ய வேண்டாம். சிறப்பு வகை டானிக் போன்ற போஷாக்குகளை வாங்கி சாப்பிட வேண்டிய தேவையில்லை.

கொழுப்பைக் குறைத்து உடலை வாளிப்பாக மாற்றும் என்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி தேவையற்ற பொருட்களை வாங்கி உடலைக் கெடுத்து விடாதீர்கள். உங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற எளிய உடற் பயிற்சிகளை தகுந்த மாஸ்டர்களின் துணையுடன் தினமும் செய்து வந்தாலே போதும். நீங்களும் சிக்ஸ் பேக் அப்பை பெறலாம்.

சிவா

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.