News

ஆடை குறைப்பு பிரச்சனை : ஜக்குபாய் விழாவை புறக்கணித்தார் ஸ்ரேயா
September 28, 2009, 3:07 PM
 
சிவாஜி படத்தின் 200வது நாள் விழாவின்போது படத்தின் நாயகி ஸ்ரேயா மகா குறைச்சலான ஆடையுடன் தோன்றி, விழாவின் சிறப்பு விருந்தினர் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை  அதிர வைத்ததும், அந்த  விவகாரம் சட்டமன்றம் வரை எதிரொலித்து அதனால் ஸ்ரேயாவுக்கு பிரச்சினைகள் வந்ததும் நினைவிருக்கலாம்.

மீண்டும் கருணாநிதி பங்கேற்கும் விழாவொன்றில் ஸ்ரேயாவும் கலந்து கொள்ளும் சூழ்நிலை. சரத்குமார் நடித்துள்ள ஜக்குபாய் பாடல்கள் வெளியீட்டு விழாதான் அது. இந்த முறை அப்படி எந்த வில்லங்கமும் வந்துவிடக்கூடாது என்று முன்கூட்டியே ஸ்ரேயாவுக்கு 'ட்ரஸ் கோட்' பற்றியெல்லாம் ட்யூஷன் எடுத்தாராம்.

இதனால் சற்று அப்செட் ஆகி விட்டார் ஸ்ரேயா என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று கலைஞர் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வரலாமா வேண்டாமா என கடைசி நிமிடம் வரை யோசித்த ஸ்ரேயா, எதற்கு வம்பு என்று வராமலேயே நின்றுவிட்டாராம்.

'போத்திகிட்டு வந்தா எனக்குப் பிரச்சினை... சுதந்திரமா வந்தா மத்தவங்களுக்குப் பிரச்சினை... இதைவிட போகாம விட்டுட்டா எந்தப் பிரச்சினையும் இல்லையே', என தனது மேனேஜரிடம் சொன்னாராம் ஸ்ரேயா.

நேற்றைய விழாவில், ஒரு பக்கம் ராதிகா, மறுபக்கம் அவர் கணவர் சரத்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் என்று மேடையில் அமர்ந்திருந்தார்கள். பாடல்களை முதல்வர் வெளியிட ரஹ்மான் பெற்றுக் கொண்டார்


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.