News

திரையுலகினர்க்கு உலகநாயகன் கமல்ஹாசனின் சவால்!
September 30, 2009, 11:49 AM

ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களை போல திரையுலகில் சிறந்த நண்பர்களாக வேறு யாராவது விளங்க முடியுமா என சவால் விடுவதாக ந‌டிக‌ர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

‌‌விஜ‌ய் டி‌வி நட‌த்‌தி பாராட்டு விழாவி‌ல் நடிக‌ர் கமல்ஹாச‌ன் பேசுகை‌யி‌ல், நான் சினிமாவிற்கு வரும்போது நிறைய கனவுகளோடு வந்தேன். ஆனால் அது ஒன்று கூட நிறைவேறவில்லை. என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

50 வருடம் சாதித்துள்ளேன் என்று கூறுகிறீர்கள். அதற்கு அன்புதான் காரணம். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தன்னை தாழ்த்தி என்னை உயர்த்தி உள்ளார். அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நட்பு இல்லை, அதையும் தாண்டியது.

ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் தேடுகிறார். நான் சமூகத்தில் தேடுகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால் அவரின் அன்பை நேசிக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அழக்கூடாது, சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டேன். இது இரண்டுமே நடக்கவில்லை. இங்கு திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வந்துள்ளனர். என் மீதுள்ள அன்பு காரணமாகவே வந்துள்ளனர். அவர்கள் கால்களை தொட்டு வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மம்முட்டி, இருவரும் 3 தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறோம். அடுத்த விருது யார் வாங்குகிறோம் பார்க்கலாம் என மம்முட்டி என்னிடம் கூறினார். இந்த போட்டியில் நான் ஜெயிப்பேனா என்பது தெரியவில்லை.

ஆனால் நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களை போல திரையுலகில் சிறந்த நண்பர்களாக வேறுயாராவது விளங்க முடியுமா என்று நான் பதில் சவால் விடுகிறேன் எ‌ன்று கம‌ல்ஹாச‌ன் பே‌சினா‌ர்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.