News

இழுத்தடிக்கும் இயக்குநர்களிடம் சிக்கித் தவிக்கும் ச்சீயான்!
October 30, 2009, 4:06 PM

அந்நியன் படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள் எதையும் விக்ரம் தரவில்லை. எந்தப் படமும் அத்தனை சீக்கிரம் வெளியாகவுமில்லை.

அந்நியன் படம் துவங்கி வெளியாக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பிடித்தது. வேறு படங்கள் எதிலும் அவர் கமிட் ஆகவுமில்லை. தமிழில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது அந்தப் படம். ஆனால் அதன் தெலுங்குப் பதிப்புதான் ஓரளவு கைகொடுத்தது.

அதன் பிறகு விக்ரம் நடித்த மஜா, சீக்கிரம் வெளியானாலும் வெற்றி  பெறவில்லை. பீமா என்ற படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 3 ஆண்டுகளைச் செலவிட்டார் விக்ரம். அதுவும் தோல்விப் படம்தான். அதன் பிறகு கந்தசாமி. சிலர் பரவாயில்லை என்றும், பலர் கந்தல்சாமி என்றும் இன்னும் கிண்டலடித்து வரும் இந்தப் படத்துக்காக 2 ஆண்டுகளுக்குமேல் செலவழித்தார் விக்ரம்.

ஆனால் இப்படியெல்லாம் பில்டப் கொடுக்காமல், கால விரயம் செய்யாமல் அவர் நடித்த சாமி, காசி போன்ற படங்களே அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்துள்ளன. இப்போது மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படமும் இரண்டாண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. சரியான திட்டமிடல் இல்லாமை மற்றும் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதால் இன்னும் படப்பிடிப்பு முடிந்தபாடில்லை. எப்போது வரும் என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

இருந்தாலும் விக்ரம் திருந்துவதாக இல்லை... மீண்டும் ஒரு மெகா லேட் புகழ் இயக்குநரிடம் சிக்கியிருக்கிறார். அவர் செல்வராகவன். இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் இன்னும் வெளிவரவில்லை. அப்படியே வெளிவந்தாலும், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தப்பிக்க முடியாத அளவுக்கு தாறுமாறான பட்ஜெட்டில் படம் எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்தப் படத்தை அப்படியே விட்டுவிட்டு, விக்ரமை வைத்து லடாக்கில் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு  துவங்கிவிட்டதாகக் கூறி வருகிறார் செல்வராகவன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை செல்வராகவன். கேட்டால், 'இப்போது ஒன்றும் அவசரமில்லை... இரண்டு மூன்று மாதங்கள் போகட்டும் பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டாராம். நல்ல அறிகுறி!


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.