ரஜினியின் பேரன் யாத்ராவின் முதல் பிறந்த தினம் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் அமர்களமாகக் கொண்டப்பட்டது.
தனுஷ்-ஐஸ்வர்யாவின் மகனுக்கு முதல் பிறந்தநாள். முக்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் அடித்து வரவேற்பு கொடுத்த ரஜினி, அனைவரையும் தானே வரவேற்று உபசரித்து மகிழ்ந்ததை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள்.
தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாட விரும்பாதவர் ரஜினி. ஆனால் தனது மகள் வழிப் பேரனுக்கு அவர் பிறந்த நாள் கொண்டாடிய விதம் வந்திருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது. குழந்தைக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை வாங்கிக் குவித்த ரஜினி, சூழ்நிலையையே மறந்து, குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாராம்.