» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

திங்கள் 25, டிசம்பர் 2017 10:50:34 AM (IST)



தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடினர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், சின்னக்கோயில் என அழைக்கப்படும் தூய இருதய பேராலயம், அந்தோணியார் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில் நிர்வாகங்கள் சார்பில் அலங்கார வாகனங்கள் தயார் செய்யப்பட்டு இரவு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டன. அலங்கார வாகனங்கள் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆலயங்களை சென்றடைந்தன. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை  பரிமாறிக் கொண்டனர். 

பவனியில் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி சின்னக்கோவிலில், பனிமயமாதா ஆலயம், இனிகோநகர், சண்முகபுரம் பரிசுத்த பேதூரு ஆலயம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் விதமாக இன்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors



Johnson's Engineers

selvam aqua


Universal Tiles Bazar





Thoothukudi Business Directory