» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்குவரத்து தாெழிலாளர்களிடம் தமிழக அரசு அராஜகம் : டிடிவி தினகரன் எம்எல்ஏ., குற்றச்சாட்டு

சனி 6, ஜனவரி 2018 6:55:59 PM (IST)



நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி போக்குவரத்து தொழிலாளர்களை கசக்கி பிழிவது அரசின் அராஜக போக்கை காட்டுகிறது என ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ.,டிடிவி தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். 

துாத்துக்குடிக்கு இன்று வந்த ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ.டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி போக்குவரத்து தொழிலாளர்களை கசக்கி பிழிவது இவர்கள் அராஜக போக்கை காட்டுகிறது. நீங்கள் மக்களால் தேர்ந்தெடுத்த முதல்வர் இல்லை. ஒரு இடி அமீன் ஸ்டைலில் உள்ளது. கமலை ஒரு நல்ல நடிகர் நல்ல சிந்தனையாளர் என நினைத்தோம். அவர் எப்படிப் பட்ட குதர்க்கமானவர் என நிருப்பித்துள்ளார். கமலஹாசனை யார் என மக்கள் தெரிந்து கொண்டனர். பேரறிஞர் அண்ணா கவர்னர் தேவையில்லை என்று கூறி உள்ளார். 

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு யார் வேண்டுமானாலும் வரட்டும் வர உள்ள தேர்தல் தான் நிர்ணயம் செய்யும் வருகிற சட்டமன்ற கூட்டத்தில் தமிழக பிரட்சனைகளான நீட் தேர்வு, நெடுவாசல், ஆர்கே.நகர் தொகுதி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, கூடங்குளத்தில் கூடுதலாக நிறுவப்பட உள்ள அணு உலைகள் குறித்து பேச உள்ளதாகவும் கூறினார், செங்கோட்டையினிடம் இருந்து பதவியை பிடுங்கியது வருந்த மளிக்கிறது. 

அவரை என் பக்கம் இழுக்க வேண்டும் என்று கூறவில்லை அவர் 1979 ம் ஆண்டு முதல் கட்சியில் இருப்பவர் என்றும் கூறினார்.தினகரனுடன் தங்க தமிழ் செல்வன், மாவட்ட செயலாளர்கள் ஹென்றி, சுந்தர்ராஜ், உமாம கேஸ்வரி, எம்பி சசிகலா புஷ்பா உட்பட பலர் உடனிருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors




Universal Tiles Bazar

Johnson's Engineers

selvam aqua



Thoothukudi Business Directory